பக்கம் எண் :

136 திருமுறைத்தலங்கள்


29. அச்சிறுபாக்கம்

அச்சரப்பாக்கம்

     தொண்டை நாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது. சென்னை -
திருச்சி தேசிய நெடுஞ் சாலையில், மதுராந்தகத்தை அடுத்து இவ்வூர்
உள்ளது. புகைவண்டி நிலையம், செங்கற்பட்டிலிருந்தும் அடிக்கடி பேருந்து
வசதி உள்ளது.

     விநாயகரை வணங்காது, திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர்
அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு + பாக்கம்) ஆதலின் இப்பெயர் பெற்றது.
இறைவன் இத்தலத்தில் விநாயகருக்கு அருள் புரிந்து, தொடர்ந்து சென்று
திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை) வென்றதாக வரலாறு. ‘மதுராந்தகச்
சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்’ என்பது
கல்வெட்டுக் குறிப்பு.

     இறைவன் - பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்ட
               நாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்.