பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 139


      கோஷ்டமூர்த்தங்களாக; சோமாஸ்கந்தர், விநாயகர், தட்சிணாமூர்த்தி,
மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதி
உள்ளது. சோமாஸ்கந்த (கோஷ்ட) மூர்த்தத்திற்குக் கீழே நாகமொன்று
சிவலிங்கத்தை வழிபடுவது போலவும், காரைக்காலம்மை தலையால்
நடப்பதுபோலவும், கண்ணப்பர் கண்ணைப் பெயர்ப்பது போலவும்
இறைவனின் கைவெளிப்பட்டுத் தடுப்பது போலவும் சிற்பங்கள் கல்லில்
உள்ளன. இருமான்களும் ஒரு தலையுடன் கூடிய சிற்பம் அழகாகவுள்ளது.
கருவறைச் சுவரில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன.

     இளங்கிளியம்மை சந்நிதி அழகாகவுள்ளது. அம்பாள் நின்ற
திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். அபிராமி
அந்தாதி, ஞானசம்பந்தரின் தலப்பதிகம், அப்பரின் க்ஷேத்திரக் கோவைப்
பதிகப் பாடல் முதலியன கல்லிற் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. துவார
கணபதி ஒரு புறமும் மறுபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். சித்திரை
மாதத்தில் பெருவிழா பத்து நாள்களுக்கு நடைபெறுகிறது. நாடொறும் நான்கு
கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. பெருவிழாவில் பதினோராம்
நாள், சுவாமி ‘பெரும்பேறு கண்டிகை’ கிராமத்திற்குச் சென்று
அகத்தியருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறும். நவராத்திரி சிறப்பாக
நடைபெறுகிறது. தனியார் கட்டளையில் பிரதோஷ புறப்பாடும்
நடைபெறுகிறது.

     இவ்வூரைச் சேர்ந்த தனபால் செட்டியார் என்பவரின் பெருமுயற்சியால்
கோயிலில் உள்ள அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் செய்யப்
பட்டுள்ளன என்பதைக் கேட்கும்போது அவரைப் போற்றுகின்றது நம்
நெஞ்சு. தல புராணம் இருப்பதாகத் தெரியவில்லை. நித்தசுதானந்த சுவாமிகள்
என்பவரால் (1) ஆட்சீஸ்வரர் அருட்குறிமாலை (2) இளங்கிளியம்மை
அருட்குறிமாலை (3) ஆட்சீஸ்வரர் அருளிரத்தமாலை (4) அருமருந்திரத்த
மாலை என்னும் நூல்கள் பாடப்பட்டு 1911-ல் வெளியிடப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. இப்பாடல்கள் எமக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுத்
திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கிடைத்ததில், ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால்
தொடங்கிவைக்கப்பட்டுத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.