தொண்டை நாட்டுத் தலம். (1) திண்டிவனம் - மயிலம் - வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று, ‘பெரும்பாக்கம்’ என்னும் இடத்தில் பிரியும் கிளைப் பாதையில் 7 கி.மீ. சென்றால் திருவக்கரையை அடையலாம். இக்கிளைப் பாதை பிரியும் இடத்தில் ஊர்ப்பெயர் கொண்ட கைகாட்டி உள்ளது. நல்ல தார்ச் சாலை, கோயிலின் வாயில் வரை பேருந்தில் செல்லலாம். “வராகநதி” என்றழைக்கப்படும் ‘சங்கராபரணி’ ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் கம்பீரமாகவுள்ளது. மிகப் பழமையான கோயில். (2) விழுப்புரத்திலிருந்து நகரப்பேருந்து செல்கிறது. மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது, இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றத்தோடு இன்று |