பக்கம் எண் :

142 திருமுறைத்தலங்கள்


கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. நல்ல நீரில் உள்ள
‘சிலிகா’ என்னும் கண்ணாடிக்கல் அணுக்கள், அம்மரங்களுள் ஊடுருவி மர
அணுக்களை மாற்றிவிட்டு, மரம் முழுவதும் நிறைந்து, மரங்களை உறுதியான
கற்களாக மாற்றிவிட்டன என்று அறிவியலார் கூறுகின்றனர். நெய்வேலியில்
பூமிக்குக்கீழ் உள்ள உப்புநீரில் மரங்கள் புதைந்ததால் அம்மரங்கள் கறுப்பாக
(நிலக்கரியாக) மாறின ; இங்கு வெள்ளையாக மாறின என்பது அறிவியற்
செய்தி. இப்குதிக்குப் பக்கத்திலுள்ள ‘செம்மேடு’ என்னுமிடத்தில் நிலவியல்
துறையினரால் ‘முதுமக்கள் தாழி’யும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

     இத்தகு சிறப்புடைய இப் பகுதியில் உள்ள இக்கோயில் பழமைச்
சிறப்புடன் மிகப்பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலுக்குள்
நிழல்தரும் மாமரங்கள் உள்ளன.

     வக்கிரன் வழிபட்ட தலம். வக்கரை என்று பெயர் பெற்றது. வல் +
கரை - வலிய கரையையுடைய இடமாதலின் (கோயிலைச் சுற்றிலும்
கற்பாறைகள்) வற்கரை - வக்கரை என்றாயிற்று என்பதும் பொருத்துகின்றது.

     இறைவன் - சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.
     இறைவி - அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை.
     தலமரம் - வில்வம்.
     தீர்த்தம் - சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம். ஒன்று தூர்ந்து
              போயிற்று. மற்றொன்றுதான் பக்கத்தில்
              சிதிலமாகியுள்ளது.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     பழமையான, பெரிய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் காட்சி
தருகின்றது. கோயிலுக்குப் பக்கத்தில் குளம் உள்ளது. படிகள் இன்றிச்
சிதிலமாகியுள்ளது. கருங்கல்மதிற்சுவர் நீளமாக முழுவதுமாக உள்ளது.
உள்ளே மாமரங்கள் அதிகம் உள்ளன. ராஜகோபுரத்தைக் கடந்ததும்
இடப்பக்கம் “வக்கிரகாளி” சந்நிதி உள்ளது. ‘வக்கரை’யில் உள்ள
காளியாதலின் ‘வக்கரைக்காளி’ என்றும் அழைக்கப்படுகிறாள். சந்நிதி
முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. காளியின் திருவுருவம்
மிக்க அழகுடையது.

     “சுடர்விடும் தீக்கனல்களைப் பின்னணியில் கொண்ட தலை
மண்டையோட்டுக் கிரீடம் - வலக்காதில் பிரேத குண்டலம் - இடக்காதில்
பத்திரகுண்டலம் - எட்டுக்கரங்கள் - வலக்கைகளில் பாசம், சக்கரம்,