பக்கம் எண் :

144 திருமுறைத்தலங்கள்


     சோமாஸ்கந்தர் முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நாடொறும்
காலை மாலை வழிபாடுகள் நடைபெறுகின்றன. குண்டலினி முனிவர்
வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க,
காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி
பெற்றதாகவும் தலபுராணம் செய்தி கூறுகின்றது. 3-6-1990-ல் கும்பாபிஷேகம்
நடைபெற்றுள்ளது. கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் மரம் கல்லானது
உள்ளது.

     “சந்திரசேகரனே அருளாய் என்று தண்விசும்பில்
      இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச
      அந்தர மூவெயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால்
      மந்தர மேரு வில்லாவளைத் தான்இடம் வக்கரையே.”

     “கார்மலி கொன்றையோடும் கதிர்மத்தமும் வாளரவும்
      நீர்மலியுஞ் சடைமேல் நிரம்பா மதிசூடி நல்ல
      வார்மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன்
      பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.”
                                               (சம்பந்தர்)

                                    -“எம்மதமும்
     சார்ந்தார் வினைநீக்கித் தாங்கு திருவக்கரையுள்
     நேர்ந்தார் உபநிடத நிச்சயமே.”               (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. சந்திரசேகரேஸ்வரர் திருக்கோயில்
     திருவக்கரை & அஞ்சல் - 604 304.
     வானூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.