பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 145


31. திருஅரசிலி

ஒழிந்தியாப்பட்டு

     தொண்டை நாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் ‘ஒழிந்தியாப்பட்டு’ என வழங்குகின்றது.

     (1) திண்டிவனம் - பாண்டிச்சேரி (வழி) கிளியனூர். சாலையில்
கிளியனூர் தைலாபுரம் தாண்டி ‘கீழ்புத்துப்பட்டு’ என்னும் கைகாட்டி மரமும்,
ஒழிந்தியாப்பட்டு என்னும் கைகாட்டி மரமும் உள்ள இடத்தில் இடப்புறமாகப்
பிரியும் அக்கிளைப் பாதையில் 2 கி.மீ. சென்று ஒழிந்தியாப்பட்டு
அடையலாம். (கிளைப்பாதை பிரியுமிடத்தில் தேவஸ்தானப் பெயர்ப்
பலகையுள்ளது.) (பாண்டிச்சேரியிலிருந்து 17-ஆவது கி.மீ.-ல் இக்கிளைப்
பாதை பிரிகிறது.

     (2) திருவக்கரையைத் தரிசித்து விட்டு வருவோர் மெயின் ரோடுக்கு
வந்து, மயிலம் - வானூர் வழிச் செல்லும் - பாண்டிச்சேரி சாலையில்,
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டினை அடைந்து, அப்பாதையில் திண்டிவனம்
செல்லும் மார்க்கத்தில் சென்று, மேற் சொல்லியவாறு ‘கீழ் புத்துப்பட்டு’
என்னும் கைகாட்டி மரம் உள்ள