பக்கம் எண் :

146 திருமுறைத்தலங்கள்


இடத்தில் வலப்புறமாகப் பிரியும் கிளைப்பாதை வழியே சென்று
ஒழிந்தியாப்பட்டு சேரலாம். கோயில் வாயில் வரை பேருந்து செல்லும் -
நல்ல சாலை. வாமதேவமுனிவர் வழிபட்ட தலம்.

     இறைவன் - அரசிலிநாதர், அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர்.
     இறைவி - பெரியநாயகி, அழகியநாயகி.
     தலமரம் - அரசு.
     தீர்த்தம் - வாமதேவ தீர்த்தம். (அரசடித் தீர்த்தம்).

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     சாளுவ வம்ச மன்னனால் கட்டப்பட்ட கோயில், வாமதேவ முனிவர்
வழிபட்டுப் பிரதோஷ நாளில் பேறு பெற்றார். சாளுவ மன்னனும் பிரதோஷ
விரதம் இருந்து பெருமானைப் போற்றிப் பேறு பெற்றான். ஆதலின்
இத்தலத்தில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ராஜகோபுரத்தை
அடுத்து உட்புறத்தில் மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன் உருவங்கள்
உள்ளன. உள்சுற்றில் விநாயகர் சந்நிதி உள்ளது. கோஷ்டமூர்த்த
தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார். பிரம்மா, துர்க்கை,
வைஷ்ணவி சந்நிதிகள் உள்ளன. ஆறுமுகர் அழகான சந்நிதி. கருவறை
வெளிச்சுவரில், ஜயங்கொண்ட சோழமண்டலத்து கோப்பரகேசரி வர்மன்
காலத்தியதாகச் சொல்லப்படும் கல்வெட்டுக்கள் உள்ளன. நால்வரைத்
தொழுது பக்க வாயில் வழியே தலப்பதிகக் கல்வெட்டைக் கண்டு ஓதியவாறே
உள்சென்று பெருமானை வழிபட வேண்டும். நேரே நடராசசபை.

     மூலவர் - சிவலிங்கத் திருமேனி - குட்டையானது ; ஆவுடையாரும்
தாழவுள்ளது. முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி தெற்கு
நோக்கியது - நின்ற திருக்கோலம். வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப்
பெரு விழா நடைபெறும். சிரவையாதீனம் கௌமார மடாலயம் ஸ்ரீ
தண்டபாணி சுவாமிகள் இத்தலத்திற்குப் பாடல்களைப் பாடியுள்ளார் எனத்
தெரிகின்றது.

     இவ்வூரில் வாழ்ந்த அறச்செல்வியார் திருமதி. ஜயலட்சுமி அம்மையார்
அவர்கள் கட்டிய திருஞானசம்பந்தர் திருமடம் கோயிலுக்குப் பக்கத்தில்
உள்ளது. இவ்வம்மையார் வைத்துள்ள அறக்கட்டளையிலிருந்து, பெரு
விழாவில் ஏழாம் நாள் உற்சவம் - தலமகிமைப்படி அரசமர வாகன
உற்சவமாக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீடாதிபதி ஜகத்குரு