பக்கம் எண் :

150 திருமுறைத்தலங்கள்


     அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலம்.

      “வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின
      கோது வித்தாய் நீறெழக்கொடி மாமதிலாயின
      ஏதவித்தாயின தீர்க்குமிடம் இரும்பைதனுள்
      மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே”   (சம்பந்தர்)

                                 “-பத்தியுள்ளோர்
      எண்ணும் புகழ்கொள் இரும்பை மாகாளத்து
      நண்ணும் சிவயோக நாட்டமே.”                (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. மகாளேஸ்வரர் திருக்கோயில்
     இரும்பை & அஞ்சல் (வழி) ஆரோவில்
     வானூர் வட்டம் - கடலூர் மாவட்டம் - 605 010.
 

33/1. திருநெல்வாயில் அரத்துறை

திருவரத்துறை, திருவட்டுறை.

     நடுநாட்டுத் தலம்.

     தற்போது திருவரத்துறை என்றும் திருவட்டுறை என்றும் வழங்குகின்றது.

     தொழுதூர் விருத்தாசலம் பேருந்துச் சாலையில் தொழுதூரிலிருந்து 20
கி.மீ. தொலைவில் உள்ளது. சாலையில் ‘கொடிகளம்’ என்னும் இடத்திலிருந்து
பிரிந்து செல்லும் மண் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை
யடையலாம். காரில் செல்வோர் கோயில்வரை செல்லலாம்.

     நிவா நதியின் கரையில் உள்ள இத்தலத்தில்தான் திருஞான
சம்பந்தருக்கு இறைவன் முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் சின்னங்களும்
அருளினார். ஊர் நெல்வாயில் ; கோயில் - அரத்துறை.