“எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லால் சென்று கைகூடுவ தன்றால் கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே !” (சம்பந்தர்) “புனல்ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே மினலொப்பானை விண்ணோரும் அறிகிலார் அனலொப்பானை அரத்துறை மேவிய கனலொப்பானைக் கண்டீர்நாம் தொழுவதே.” (அப்பர்) “கல்வாயகிலுங் கதிர்மாமணியுங் கலந்துந் திவருந்நிவாவின் கரைமேல் நெல்வாயில் அரத்துறை நீடுறையுந் நிலவெண்மதி சூடிய நின்மலனே நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்றது அறிந்தடியேன் தொடர்ந்தேன் உய்யப் போவதோர்சூழல் சொல்லே” (சுந்தரர்) “சோதிமுத்தின் சிவிகைசூழ் வந்துபார் மீதுதாழ்ந்து வெண்ணீற் றொளிபோற்றி நின்று ஆதியார் அருளாதலின் அஞ்செழுத்து ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்” (திருஞான பெரிய.புரா.) “தீங்கார் புறதெய்வத் தீங்குழியில் வீழ்ந்தவரைத் தாங்கா அரத்துறையில் தாணுவே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. ஆனந்தீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோயில் திருவட்டுறை & அஞ்சல் திட்டக்குடி வட்டம் - கடலூர் மாவட்டம் - 606 111. (வழி) விருத்தாசலம் R.M.S. |