பக்கம் எண் :

154 திருமுறைத்தலங்கள்


பாதையில் (விருத்தாசலத்திலிருந்து) 17 கி.மீ. தொலைவில் உள்ள தலம்.
பேருந்து வசதி உண்டு. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில்
தொழுதூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

     தேவகன்னியரும், காமதேனுவும், வெள்ளையானையும் வழிபட்ட தலம்.
(பெண் + ஆ+ கடம்). இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்)
வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்’ எனப்பெயர் பெற்றதென்பர். ஆழிபுரண்டக்கால்
அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த
பெருமானின் திருத்தலம்.

     இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர்
இத்தலத்து இறைவனைக்கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர்
வாராமைகண்டு இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து,
தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவைத் தேடிச்செல்லுமாறு
இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை
கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத
இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து பெருமானை
வழிபட்டான் என்னும் வரலாறு இத்தலத்தில் சொல்லப்படுகிறது. எனவே
மேற்சொல்லிய மூவரும் வழிபட்ட தலம் - பெண்ணாகடம் எனப் பெயர்
பெற்றதென்பர்.

     அப்பர் - சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.
பணியாளே சிவனடியாராக வரக்கண்டு, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின்
கையை வெட்டிய கலிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்ற தலம்.
மெய்கண்டாரின் அவதாரத் தலம்.

     இறைவன் - சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர்.
     இறைவி - ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி.
     தலமரம் - சண்பகம்.
     தீர்த்தம் - கயிலைத்தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம்,
              முக்குளம், வெள்ளாறு.

     இக்கோயிலுக்குத் ‘தூங்கானைமாடம்’ (கஜப் பிரஷ்டம்) என்பது
பெயர்.
சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது. ராஜகோபுரம் 5
நிலைகளையுடையது. கோயிலின் முன்வாயிலில் தென்பால் குடவரை
விநாயகரைத் தரிசிக்கலாம். மதிலையடுத்து உள்ளே நந்தவனம் உளது.
வடபால் வாகன மண்டபம் அதிகாரநந்தி - பெருமிதத் தோற்றத்துடன்