1. கபிலை தீர்த்தம் :- கோயிலை அடுத்து மேற்பால் உள்ளது. காமதேனு, சிவபூசை செய்யும்போது, வழிந்தோடிய பால் நிரம்பி குளமாகியது என்பர். 2. பார்வதி தீர்த்தம் :- கோயிலின் முன் கீழ்த்திசையில் உள்ளது. இதற்குப் பரமானந்ததீர்த்தம் என்றும் பெயர் சொல்லப்படுகிறது. 3. முக்குளம் :- ஊரின் வட மேற்கில் அமைந்துள்ளது. 4. இந்திரதீர்த்தம் :- ஊரின் கிழக்கில் அமைந்துள்ளது. 5. வெள்ளாறு :- இந்த ஆற்றில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் :- 1. தயராசபதி - ஐராவதம் வழிபட்டதால் வந்த பெயர். 2. புஷ்பவனம், புஷ்பாரண்யம் ; ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் வந்த பெயர். 3. மகேந்திரபுரி. இந்திரன் வழிபட்டதால் வந்த பெயர். 4. பார்வதிபுரம் - பார்வதி வழிபட்டதால் வந்த பெயர். 5. சோகநாசனம் - நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் வந்த பெயர். 6. சிவவாசம் - இறைவனுக்குகந்த பதி. இறைவனுக்கு வழங்கும் வேறு பெயர் :- கைவழங்கீசர் - கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான். இராஜகோபுரத்தின் வடபால் உள்ள நடராஜர் கோபுரமும் சந்நிதியும் தரிசிக்க அழகானது. உயரமான, கலையழகுடன் கூடிய நடராசர். பக்கத்தில் உமையும் - திருமுறைப்பேழையும். சதுர ஆவுடையாருடன் கூடி மூலவர் பெரிய மூர்த்தமாகக் காட்சி தருகின்றார். அம்பாள் தனிச் சந்நிதி, நின்ற திருக்கோலம். துர்க்கைக்கும் தனிச் சந்நிதி உள்ளது. ஆண்டுதோறும் சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது. சித்திரைச் சதய விழாவில் அப்பர் சுவாமிகள் சைவ சமயஞ்சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு |