“திருமுகமும் விழிமூன்றும் செய்யவாயும் செறிநகையும் குழைக்காதும் அமுதவாக்கும் புருவமுடன் கருங்குழலும் நாசிகண்டம் புயனான்குமணிப் பூணும் புவனந் தந்த மருவு திருமணி வயிறும் வயங்கித் தோன்ற மன்று திருக் கடந்தையரன் வாமமேவும் அருள்பொழியும் அழகிய காதலி பாதத்தை அனுதினமும் அன்பொடு வணங்கி வாழ்வாம்.” (திருக்கடந்தைப் புராணம்) “செய்ய திருக்கடந்தையினில் வணிகர் தங்கள் திருமரபில் அவதரித்துச் சிவனைநாடி மெய்யடியார்க் கமுதளிப்பார் பண்டுதம் பால் வினையேவல் செய்யொருவர் மேவக்கண்டு துய்யதாள் விளக்குதற்கு நீர்விடாத துணைவிகரந்தனைத் துணித்துத் துணிந்துதாமே கையதனாலுபசரித்துக் கயிலை சேர்ந்த கலிக்கம்பர் பதமலரைக் கருதுவோமே.” (திருக்கடந்தைப் புராணம்) “ஓங்குபுகழ்த் திருக்கடந்தை நகரில் வேளாண் உயர்குலஞ் செய்பெருந்தவமோருரு வுற்றாங்கு வாங்குதிரைக் கடலுலகில் வந்து தோன்றி மாதேவன் திருவடியை மறவாநெஞ்சில் பாங்குறு நற்பரஞ்சோதி முனிவர் கூறும் பதிபசுபாசத்திறனிப் பாரோர் தேர்ந்து தீங்ககலச் சிவஞான போதஞ்சாற்றும் செய்யமெய்க் கண்டார்தாள் சிரத்தில்வைப்பாம்.” (திருக்கடந்தைப் புராணம்) “வாய்ந்த புகழ் மெய்கண்டதேவருக்கு மாணாக்கர் அருணந்தி தேவர்தம் பால் ஆய்ந்த பலகலையோதித் தமையடைந்த அருள்பெருகு கொற்றவன் குடியில் வாழும் காய்ந்தபவத்துமா பதிதேவருக்கு ஞானம் கவின வுரைத்தருள் செய்யுங் கடந்தைவந்த ஏய்ந்த தவத்துயர்ந்த மறை ஞான தேவர் இணைமலர்த்தாளெஞ்ஞான்றும் இறைஞ் சுவாமே” (திருக்கடந்தைப் புராணம்) (திருக்கடந்தைப் புராணம் என்னும் இத்தல புராணம் சிவஞானப் பிரான் பிள்ளை என்பவர் இயற்றியது.) |