பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 159


                                        “-பூங்குழலார்
     வீங்கானை மாடஞ்சேர் விண்ணென்றகல் கடந்தைத்
     தூங்கானைமாடச் சுடர்க்கொழுந்தே.          (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. பிரளயகாலேஸ்வரர் (சுடர்க்கொழுந்தீசர்) திருக்கோயில்
     பெண்ணாடம் & அஞ்சல்
     திட்டக்குடி வட்டம் - கடலூர் மாவட்டம் - 606 105.
     (வழி) விருத்தாசலம் R.M.S.

35/3. திருக்கூடலையாற்றூர்.

     நடுநாட்டுத் தலம்.

     1. சேத்தியாதோப்பு - கும்பகோணம் பாதையில் ‘குமாரகுடி’ வந்து, ஸ்ரீ
முஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று, ‘காவாலகுடி’
சாலையில் திரும்பி, 2 கி.மீ. சென்று ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள
கூடலையாற்றூரை அடையலாம்.

     கோயில் வரை பேருந்து செல்லும்.

     2. சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்து உள்ளது. மணிமுத்தாறும்
வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் கூடலையாற்றூர் என்று
பெயர் பெற்றது. வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிய, அங்கிருந்த
கற்களைக் கொண்டு வந்து, இவ்வூரில் கோயிலைக் கட்டி சுவாமி அம்பாளை
எழுந்தருளச் செய்துள்ளனர். இக்கோயில் நூறாண்டுகளுக்கு முன்னர்
கட்டப்பட்டதென்பர்.

     சுந்தரர் திருமுதுகுன்றம் சென்றபோது, இத்தலத்தை வணங்காமற்
செல்ல, இறைவன் அந்தணராக வந்து, முன்செல்ல ; சுந்தரர் அவரைத்
திருமுதுகுன்றத்திற்கு வழி யாதெனக் கேட்க, ‘கூடலையாற்றுருக்கு வழி இஃது’
என்று கூறி மறைய, திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார்
என்பது வரலாறு.

     இறைவன் - நர்த்தனவல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாதர்
     இறைவி - பராசக்தி, ஞானசக்தி (இரு அம்பாள் சந்நிதிகள்)
              (புரிகுழல்நாயகி)