பக்கம் எண் :

172 திருமுறைத்தலங்கள்


     இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
பிட்சாடனர், சந்திரசேகர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, அஸ்திரதேவர்,
திலகவதியார், நால்வர் ; சண்டேசுவரர் முதலிய உற்சவத் திருமேனிகள்
தரிசிக்கத் தக்கவை.

     சுவாமி கருவறை, பூமியில் நிழல் சாயாதபடி கட்டப்பட்டுள்ள தேர்
போன்ற அமைப்பு. (காஞ்சி கயிலாய நாதர் கோயில் அமைப்பை
நினைவூட்டுகிறது) கருவறை சுதையாலான பணி. இதன் முன் பகுதி வளர்த்துக்
கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச் சிற்பங்கள்
- சற்று வளர்த்திச் செய்யப்பட்டு உள்ளன. இச்சிற்பங்களுள் தட்சிணாமூர்த்தி,
லிங்கோற்பவர், துர்க்கை, சண்டேஸ்வரர், சரப மூர்த்தி, கல்யாணசுந்தரர்,
ஏகபாதர் முதலியன பேரழகு வாய்ந்தவை.

     அதிகை - வீரட்டானம் அரிய சிற்பங்களைக்கொண்ட, கலைப்
பெட்டகமாகத் திகழ்கின்றது.

     அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி வலப்பால் தனிக்கோயிலாகவுள்ளது.
அழகிய திருமேனி - நின்ற திருக்கோலம் - அபயவரதத்துடன் கூடிய நான்கு
திருக்கரங்கள் - எதிரில் நந்தியுள்ளது. நிறைவான தரிசனம். வைகாசி
விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெரு விழாவும், சித்திரைச் சதயத்தில் பத்து
நாள்களுக்கு அப்பர் சுவாமி திருவிழாவும் நடைபெறுகின்றன.

     நாடொறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடக்கின்றன. கோயிலில்
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் கட்டளையாக ‘சிவ சிவ ஒலி மண்டபம்’
1962-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

     இத்தலத்தில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டி, 1 கி.மீ.
தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இதுவே
சித்த வட மடம் ஆகும்.
இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது.
(சித்தவடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம்
என்றெல்லாம் வழங்கினர்.) இப்பகுதி இப்போது கோடாலம்பாக்கம் என்றும்
அழைக்கப்படுகிறது.

     மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - “ஆதிமூல
குணபரேச்சுரன் கோயில்” என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப்
பக்கத்தில் மேற்கே பெரிய ரோடுக் கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக
இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காட்சி தருகின்றது.
தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது.
இக்கோயில் மராட்டிய ஆங்கிலேயர் காலத்தில்