பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 173


போர்க் கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில்
அறிகிறோம்.

     “எண்ணார் எழில்எய்தான் இறைவன் அனல் ஏந்தி
      மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
      பண்ணார் மறை பாடப் பரமன் அதிகையுள்
      விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே.”     (சம்பந்தர்)

     “நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயோனல்லேன்
      ஓதியும் உணரமாட்டேன் உன்னையுள் வைக்கமாட்டேன்
      சோதியே சுடரே உன்தன் தூமலர்ப் பாதங்காண்பான்
      ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே.”  (அப்பர்)

     “தம்மானை யறியாத சாதியார் உளரே, சடைமேற்கொள்
                      பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
      கைம்மாவின் உரியானைக்கரி காட்டிலாட, லுடையானை
                    விடையானைக் கறைகொண்ட கண்டத்
      தெம்மான்தன் அடிக்கொண்டு என்முடிமேல் வைத்திடுமென்னும்,
                    ஆசையால் வாழ்கின்ற அறிவிலாநாயேன்
      எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து, உறைவானை
                    இறைபோதும் இகழ்வன் போலியானே.”
                                               (சுந்தரர்)

                                     -‘வார்கெடிலச்
      சென்னதிகை யோங்கித் திலகவதியார் பரவு
       மன்னதிகை வீரட்ட மாதவமே.’              (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
     திருவதிகை - பண்ருட்டி அஞ்சல்
     கடலூர் மாவட்டம் - 607 106.