பக்கம் எண் :

174 திருமுறைத்தலங்கள்


40/8. திருநாவலூர்

     நடுநாட்டுத் தலம்

     மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் ‘திருநாமநல்லூர்’ என்று
வழங்குகின்றது. (அரசு பெயர்ப் பலகைகள் முதலியவையெல்லாம்
திருநாவலூர் என்றே உள்ளன.)

     1. சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி
உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, மெயின்ரோட்டில்
உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே
இடப்பக்கமாகச் செல்லும் பண்ருட்டி சாலையில் 2 கி.மீ சென்றால்
ஊரையடையலாம். சாலையோரத்தில் ஊரின் முதலிலேயே கோயில் உள்ளது.

     2. பேருந்தில் செல்வோர் விழுப்புரத்திலிருந்து அரசூர், மடப்பட்டு
வழியாக உளுந்தூர்ப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி கெடிலம் Stop
என்று கேட்டு அங்கு இறங்கினால் கடலூர்-பண்ருட்டி செல்லும் பேருந்துகள்
வரும். அவற்றில் ஏறி 2 கி.மீ சென்று ஊரையடைந்து மேற்சொல்லியவாறு
கோயிலை அடையலாம். (திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள
இடமே ‘கெடிலம் Stopping’ என்று சொல்லப்படுகிறது. கோயில் உள்ள
இடத்தில் Stopping உண்டு. பேருந்துகள் நிற்கும்.

     சுந்தரர் அவதாரத் தலம். சுக்ரன் வழிபட்ட தலம்.

     இறைவன் - பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்.
     இறைவி - மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை
     தலமரம் - நாவல்.
     தீர்த்தம் - கோமுகி தீர்த்தம்.

     சுந்தரர் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது.

     ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் புத்தம் புதிய பொலிவுடன்
திகழ்கிறது. (ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திருப்பணி.)

     கோபுரத்தையடுத்து இடப்பால் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது.
பரவை, சங்கிலியார் சூழ எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில்
தாளமேந்தி காட்சி தருகிறார். உள் இடம் மிகவும் விசாலமாக