பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 179


உள. வல்லபை கணபதி, மீனாட்சி சொக்கலிங்கம், விசுவநாதலிங்கம்,
ஆறுமுகர், ஸஹஸ்ர லிங்கம், ஏகாம்பர லிங்கம், ஜம்புலிங்கம்,
அண்ணாமலையார் முதலிய சந்நிதிகள் உள்ளன. பெரிய நாயகி கோயிலுக்கு
இப் பிராகாரத்திலிருந்து செல்வதற்கு அமைந்துள்ள வாயிலில் நவக்
கிரகங்களும் தண்டபாணி சந்நிதியும் உள்ளன. இசை மண்டபம் (அ)
அலங்கார மண்டபமே உற்சவரான பெரிய நாயகர் எழுந்தருளியுள்ள
இடமாகும். எல்லாத் திருமஞ்சனச் சிறப்பும் இங்கு இவருக்குத்தான். இவர்
ஆண்டில் ஒரு நாள் மட்டும் - அதாவது மாசி மகம் ஆறாம் நாள் விழாவில்
- வெளியில் உலா வருவார். மற்ற விழாக்காலங்களில் சிறிய பழமலை நாயகர்
வெளியில் உலா வருவது மரபு. பௌர்ணமி, பிரதோஷ காலங்களில் பெரிய
நாயகரை ஏராளமான மக்கள் வந்து வழிபடுகின்றனர்.

     பெரிய நாயகர் உற்சவ மூர்த்தியாதலின் நாடொறும் அலங்கார
தீபாராதனைகள் அனைத்தும் ‘உடையவர்’ எனப்படும் ஸ்படிகலிங்கத்திற்கே
செய்யப்படுகின்றன.

     இசை மண்டபத்தின் வடபால் உள்ள நடராசசபையுடன் வன்னியடிப்
பிராகாரம் நிறைவாகிறது.

     அடுத்து மூன்றாவது (உள்) சுற்று மதிலைக் கடந்தால் அறுபத்து மூவர்
பிராகாரத்தை அடையலாம். நால்வர், விநாயகர், அறுபத்துமூவர், ரிஷபாரூடர்,
யோக தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், உருத்திரர், மாற்றுரைத்த விநாயகர்
முதலிய திருவுருவங்கள் உள்ளன. அடுத்துள்ளவை வருணலிங்கம்,
முப்பிள்ளையார், தட்சிணாமூர்த்தி ஆகியவை. சின்னப் பழமலை நாதர்,
(உற்சவர்) வள்ளி தெய்வயானை சமேத முருகர், வல்லபை கணபதி, பிந்து
மாதவப் பெருமாள், மயூர முருகன் முதலிய சந்நிதிகளை அடுத்துத்
தரிசிக்கலாம்.

     இளமை நாயகி (பாலாம்பிகை) கோயில் உள்ளது. பெரிய நாயகியே
குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இளமை
நாயகிக்குத் தனிக்கோயில் உள்ளது. கஜலட்சுமி, பைரவர், சூரியலிங்கம்,
சூரியன் சந்நிதிகள் உள்ளன.

     அடுத்து மகாமண்டபத்தையடைகிறோம். உள்ளிருப்பது ஸ்தபன
மண்டபம், துவார பாலகர்களைத் தொழுது சென்று கர்ப்பக்கிருகத்தில்
மூலவராகிய பழமலை நாதரைத் தரிசிக்கிறோம் - மனநிறைவான தரிசனம்.

இத்தலத்தில் குருநமசிவாயர் பற்றிச் சொல்லப்படும் ஒரு வரலாறு வருமாறு :-