பக்கம் எண் :

182 திருமுறைத்தலங்கள்


     16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானக்கூத்தர் என்பவர்தாம்
திருமுதுகுன்றத் தலபுராணத்தைத் தமிழில் பாடியுள்ளார். நாடொறும் நான்கு
கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

     “மத்தா வரை நிறுவிக்கடல் கடைந்தவ் விடமுண்ட
      தொத்தார் தருமணி நீண்முடிச் சுடர் வண்ணன திடமாம்
      கொத்தார் மலர் குளிர் சத்தகி லொளிர் குங்குமங் கொண்டு
      முத்தாறு வந்தடி வீழ்தரு முதுகுன் றடைவோமே”
                                               (சம்பந்தர்)

      கருமணியைக் கனகத்தின் குன்றொப்பானைக்
           கருதுவார்க் காற்றவெளி யான்றன்னைக்
      குருமணியைக் கோளரவ மாட்டுவானைக்
           கொல்வேங்கை யதளானைக் கோவணவன்றன்னை
      அருமணியை யடைந்தவர்கட்கு அமுதொப்பானை
           ஆனஞ்சும் ஆடியைநான் அபயம்புக்கத்
      திருமணியைத் திருமுதுகுன்றுடை யான்றன்னைத்
           தீவினையே னறியாதே திகைத்தவாறே.     (அப்பர்)

      மெய்யைமுற்றப் பொடிப்பூசியொர்நம்பி
                     வேதநான்கும்விரித் தோதியொர்நம்பி
      கையிலோர்வெண் மழுவேந்தியொர்நம்பி
           கண்ணுமூன்றுடை யாயொருநம்பி
      செய்யநம்பிசிறுச் செஞ்சடைநம்பி
           திரிபுரந்தீயெழச் செற்றதோர்வில்லா(ல்)
      எய்தநம்பி யென்னையாளுடைநம்பி
          யெழுபிறப்புமெங் கணம்பிகண்டாயே
                                              (சுந்தரர்)

                                          -‘தேவகமாம்
      மன்றமமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
      குன்றம் அமர்ந்த அருட்கொள்கையே’          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. பழமலைநாதர் திருக்கோயில்
     விருத்தாசலம் & அஞ்சல் - 606 001.
     விழுப்புரம் மாவட்டம்