பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 183


42/10. திருநெல்வெண்ணெய்

நெய்வெணை

     நடுநாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் ‘நெய்வெணை’ என்று வழங்குகிறது.

     (1) தெ.ஆ.மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை பேருந்து நிலையத்தின்
பக்கத்தில் செல்லும் திருவெண்ணெய்நல்லூர் சாலையில் இக்கிராமம் உள்ளது.
உளுந்தூர்ப்பேட்டை நகரப் பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பிருந்து மினி
பஸ் ஒன்று செல்லுகிறது. இப்பேருந்து சிறு சிறு கிராமங்கள் வழியாகச்
சென்று நெய்வெணை வழியாகத் திருக்கோயிலூரை அடைகிறது.
ஒற்றையடிப்பாதை - குறுகலும் வளையும் கொண்டவை. ஒரே மினி பஸ்
இவ்வழியாகச் செல்வதால் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து
கொண்டேயிருக்கிறது.

     இப்பேருந்து காலை 8-30, நண்பகல் 1-30, மாலை 6-30 என மூன்று
வேளைகள் மட்டுமே செல்கிறது. இதிற்செல்வோர், நெய்வெணை கோயிலின்
முன்பு இறங்கிப் பார்த்துவிட்டு இதிலேயே திரும்பிவந்து விடவேண்டும்.
வேறு வழியில்லை. தனிப் பேருந்தில் தலப்பயணம் மேற்கொள்ளும்
திருக்கூட்டத்தினருக்கு இப்பாதை முற்றிலும் ஏற்றதன்று.

     (2) அவர்கள் உளுந்தூர்ப்பேட்டை - திருக்கோயிலூர் (வழி)
எலவானாசூர்கோட்டை நெடுஞ்சாலையில் வந்து “எறையூர்” அடைந்து
அங்கிருந்து பிரியும் பாதையில் வந்து (வடகுரும்பூர் வழியாக) 4 கி.மீ.
தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். இப்பாதை அகலமானது.
பேருந்திற்கு ஏற்றது. இவ்வழியே சிறந்த வழி. இப்பாதை புதியதாகப்
போடப்பட்டுள்ளது.

     (3) எறையூர் - நெய்வெணை நகரப் பேருந்து (Town Bus)
செல்கின்றது.  

     (4) உளுந்தூர்ப்பேட்டையிலிருந்து நேரே சேலம் ரோடில் சென்று
குமாரமங்கலம் தாண்டி, வலப்புறமாகப் பிரியும் அங்கனூர் நெய்வெணை
சென்றால், நெய்வெணையை அடையலாம். (Single Road)

     சிறிய கிராமம். கோயிலின் பக்கத்தில் குருக்கள் வீடு உள்ளது.
ராஜகோபுரமில்லை - முகப்பு வாயில் மட்டுமே. சிறிய கோயில்.