ஆராதனை நடைபெறுகிறது. மத்வர்களுக்கு முக்கியமானதான ஸ்ரீ ரகோத்தம சுவாமி பிருந்தாவனமும் இத்தலத்தில் (பாலத்தின் அருகில்) உள்ளது. இங்கு மார்கழியில் விசேஷ ஆராதனை நடைபெறுகின்றது. இத்தலத்திற்குப் பக்கத்தில் அறையணிநல்லூர் உள்ளது. “கரவலாளர் தம்மனைக் கடைகடோறுங் கானிமிர்த் திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டில் நீ குரவமேறி வண்டினங் குழலொடுயாழ் செல்கோவலூர் விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.” (சம்பந்தர்) “வழித்தலைப் படவுமாட்டேன் வைகலுந் தூய்மை செய்து பழித்திலேன் பாசமற்றுப் பரம நான் பரவமாட்டேன் இழித்திலேன் பிறவிதன்னை என் நினைந்திருக்கமாட்டேன் கொழித்து வந்தலைக்கும் தெண்ணீர்க்கோவல் வீரட்டனீரே.” (அப்பர்) -‘சொல்வண்ணம் நாவலர் போற்று நலம் பெறவே ஓங்குதிருக் கோவலூர் வீரட்டங் கொள் பரிசே.’ (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழையூர் திருக்கோயிலூர் & அஞ்சல் - 605 757. திருக்கோயிலூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம். |