பக்கம் எண் :

194 திருமுறைத்தலங்கள்


                                       ‘-ஆவலர்மா
     தேவா இறைவா சிவனே எனுமுழக்கம்
     ஓவா அறையணிநல்லூர் உயர்வே.”             (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. அதுல்ய நாதேஸ்வரர் தேவஸ்தானம்
     (அறையணிநாதேஸ்வரர் தேவஸ்தானம்)
     அரகண்டநல்லூர் & அஞ்சல் - 605 752.
     திருக்கோயிலூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்

45/13. இடையாறு

T. எடையார்

     நடுநாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் ‘ T. எடையார்’ என்று வழங்குகிறது.

     திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர்
செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. கோயில்
சாலையோரத்தில் உள்ளது. சுகர்முனிவர் வழிபட்ட தலம்.

     இறைவன் - மருதீஸ்வரர், இடையாற்றீசர்
     இறைவி - ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி

     சுந்தரர் பாடியது.

     கோயில் பழமையானது. மேற்கு நோக்கிய சந்நிதி. சுற்றுச் சுவர்
முன்பக்கம் தவிர மற்றப் பக்கங்களில் நன்குள்ளது. மூன்று நிலைகளுடன்
கோபுரம் உள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் உள்ளது. நந்தியுமில்லை.
உள்ளே இடப்பால் மண்டபம் உள்ளது. இதில் வள்ளி தெய்வயானை சமேத
சண்முகர் சந்நிதி உள்ளது. எஞ்சிய இடம் வாகனமண்டபமாகப் பயன்படுகிறது.

உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர
லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத