பக்கம் எண் :

196 திருமுறைத்தலங்கள்


46/14. திருவெண்ணெய் நல்லூர்.

     நடுநாட்டுத் தலம்.

     1) விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர் சென்று High-ways
Inspection Bungalow வை அடுத்து வலப்புறமாகச் செல்லும் திருக்கோயிலூர்
பாதையில் சென்று திருவெண்ணெய் நல்லூர்ரோடு Railway Station லெவல்
கிராசிங்கைத் தாண்டிச் சென்றால் (5 கி.மீ) ஊரையடையலாம். (ஊருள்
இடப்புறமாகச் செல்லும் சாலையில் போய்க் கோயிலையடையலாம்.)

     2) பண்ருட்டி - அரசூர் சாலையில் உள்ள தலம்.

     3) திருக்கோயிலூரிலிருந்து சித்தலிங்க மடம் வழியாகவும்,

     4) மடப்பட்டிலிருந்து பெரிய செவலை வழியாகவும் திருவெண்ணெய்
நல்லூருக்குப் பேருந்துகள் உள்ளன.

     5) விழுப்புரம் - திருவெண்ணெய் நல்லூர் நகரப் பேருந்து உள்ளது.

     6) (திருக்கோயிலூர்) கீழையூரிலிருந்து செல்வோர் மடப்பட்டு, கடலூர்,
பண்ருட்டி செல்லும் பாதையில் (Main Road) ல் சென்று, பண்ருட்டி சாலை
வலப்புறமாகப் பிரிய ; இடப்பக்கமாகப் பிரியும் உளுந்தூர்ப்பேட்டை
சாலையில் திரும்பி ஊரையடையலாம். கீழையூரிலிருந்து இத்தலம் 18 கி.மீ.
தொலைவு.

     சுந்தரரின் அருள் வாழ்விற்கு இடமான தலம். வழக்கிட்டு, ஆரூரரை
வலியவந்து ஆட்கொண்ட தலம் ; நின் ‘வருமுறைமனையும் நீடு வாழ்க்கையும்
காட்டுக’ என்று கேட்டவர்க்கு ‘என் இருப்பிடம் இதுவே’ என்று இறைவன்
காட்டிய திருக்கோயிலை உடைய பதி. ‘அடையா நெடுங்கதவும் அஞ்சல்
என்ற சொல்லும் உடையான்’