பக்கம் எண் :

200 திருமுறைத்தலங்கள்


    களித்தே வந்து முக்குளநீர்
          கண்டே படிந்தோர் பாலுதித்து
     மைகொண் டிலங்கு மணிகண்டன்
          வளருங் கயிலைத்திரு நந்தி
     மறையா கமத்தைக் குழந்தையெனும்
          வடிவாய்த் தமிழ்செய் சுவேதவன
     மெய்கண் டவன்வாழ் வெண்ணெய்நல்லூர்
          வேலா சிற்றில் சிதையேலே
     விளையாட் டோரைந் துடையாய்நீ
          விளங்குஞ் சிற்றில் சிதையேலே.
                        (க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்)

                                        -“இடையாறு
  சொல் ஊரன் தன்னைத் தொழும்பு கொளுஞ் சீர்வெண்ணெய்
  நல்லூர் அருட்டுறையின் நற்பயனே.”              (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. கிருபாபுரீஸ்வரர் தேவஸ்தானம்
     திருவெண்ணெய்நல்லூர் & அஞ்சல்
     திருக்கோயிலூர் வட்டம் - விழுப்புரம் மாவட்டம் 607 203.

47/15. திருத்துறையூர்

திருத்தளூர்

     நடுநாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் திருத்தளூர் என வழங்குகிறது. 1. பண்ருட்டியிலிருந்து
புறப்பட்டு மேற்படி சாலையில் துணை மின் நிலையம் (Elec. Sub Station)
உள்ள இடத்தில் வலப்பக்கமாகத் திரும்பிச் சென்று, தேர்முக்கு, உள்ள
இடத்தில் இடப்பால் திரும்பி, (பண்ருட்டி - புதுப்பேட்டை வழியாக -
அரசூர் செல்லும் சாலையில்) 10 கி.மீ. சென்று மீண்டும் ‘கரும்பூர்’ சாலையில்
திரும்பி 5 கி.மீ. சென்று ஊரையடையலாம்.

    2. பண்ருட்டியிலிருந்து பஸ் உள்ளது.