பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 203


இருந்த கோயில் அமைப்பு பிற்காலத்தில் திருப்பணி செய்தோரால்
மாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்கின்றனர்.

     இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள திருமுறைத் தலங்கள் ; திருநாவலூர்
திருவதிகை, திருமாணிகுழி, திருவடுகூர், திருப்பாதிரிப் புலியூர் முதலியன.
கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் “ராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்
பாடித் திருத்துறையூர்” என்றும் ; இறைவன் பெயர் “தவநெறி ஆளுடையார்”
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

   “மலையார் அருவித்திரண் மாமணியுந்திக்
    குலையாரக் கொணர்ந் தெற்றியொர் பெண்ணை வடபால்
    கலையாரல்குற்கன்னியராடுந் துறையூர்த்
    தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.”  (சுந்தரர்)

                                 “-மல்லார்ந்து
    மாசுந்துறையூர் மகிபன் முதல் மூவருஞ்சீர்
    பேசுந் துறையூர்ப் பிறை சூடீ.”          (அருட்பா)

     “கவை கொள்வான் காற்பன்றி மின்னோர்
          கரிய வேடன் உருவமெய்தி
     அவை புரிந்தாய் தமியனேனுக்கு
          அருள்செயாமை அறமதாமோ
     குவைய பொன்னும் நெல்லும் நல்கிக்
          கோடிப் பாடல் கொண்ட நம்பா
     இவையமர்ந்த பங்குளானே
          திருத்துறையூர்ச் சிவபிரானே.”
                - வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்

அஞ்சல் முகவரி :-

 அ/மி. சிஷ்டகுருநாதேஸ்வரர்/ பசுபதீஸ்வரர் திருக்கோயில்
  திருத்துறையூர் & அஞ்சல் - 607 205.
  பண்ருட்டி வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.