பக்கம் எண் :

206 திருமுறைத்தலங்கள்


49/17. திருமாணிகுழி.

     நடுநாட்டுத் தலம்.

     1. (கடலூர் N.T.) திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து,
திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில்
திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, சுந்தரர்பாடி என்னுமிடத்திற்கு அருகில்
சாத்தாங் குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று, கெடில நதிப்
பாலத்தைக் கடந்து சிறிதுதூரம் சென்றால் திருமாணிகுழியை அடையலாம்.
சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. தலமும் கோயிலும் கெடிலத்தின்
தென் கரையில், கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன.

     2. கடலூர் - குமணங்குளம் நகரப்பேருந்து திருமாணிகுழி வழியாகச்
செல்கிறது. இதில் வந்தால் கோயிலின் வாயிலிலேயே இறங்கலாம்.