பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 213


காணப்படுகிறது. நடராசசபை - நவக்கிரக சந்நிதி - பைரவர் - சூரியன்.
உள்வலமுடித்துப் படிகளேறி மூலவர் சந்நிதியை அடையலாம். முன்
மண்டபத்தில் சுதைசிற்பங்கள் உள்ளன. துவாரபாலகரைத் தொழுது
உட்சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். கவசமணிந்து கண்ணுக்கு
ரம்யமாகக் காட்சி தருகின்றார்.

     அம்பாள் கோயில் பக்கத்தில் தனியே உள்ளது. கிழக்கு நோக்கியது.
முன் மண்டபத்தில் ரிஷபாரூடர், காளிங்கநர்த்தனம், மோகினிநடனம்,
காமதேனு வழிபாடு, வீணாவாணி, அவிர்சடைப் பெருமான், ஆஞ்சநேயர்
முதலிய உருவங்கள் கற்றூணில் செதுக்கப்பட்டுள்ளன.

     உள்சுற்றில் விநாயகர், ஆறுமுகர் உற்சவ அம்பாள் சந்நிதிகள் உள.
அம்பாள் நின்ற திருக்கோலம் - நல்ல அழகு. அம்பாள் சந்நிதியை
யொட்டியே எதிரில் வீதியோரமாகப் பிற்காலப் பிரதிஷ்டையாகிய பிடாரி
கோயில் உள்ளது. கோயிலில் எல்லா மாதாந்திர விழாக்களும், நவராத்திரி,
சஷ்டி, கார்த்திகை சோமவாரங்கள், மாசிமகக் கடலாட்டு முதலிய அனைத்தும்
நடைபெறுகின்றன. வெள்ளித் தேர் உள்ளது. வைகாசியில் பெருவிழாவும்,
சித்திரையில் வசந்தோற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசியில்
பிடாரி உற்சவமும் ஒருவாரகாலம் நடைபெறுகிறது.

     அப்பர் சதயவிழா சித்திரை சதயத்தில் வெகுவிமரிசையாக
நடைபெறுகிறது. வெள்ளிரிஷபத்தில் வீதியுலா, திருவையாறு கயிலைக் காட்சி,
திருப்புகலூர் ஐக்கிய ஐதிகம் முதலியவை நடைபெறுகின்றன. அ/மி.
பாடலேஸ்வரர் ஒரு நாள் வண்டிப்பாளையத்திற்கும் (சித்திரை, அனுஷம்)
எழுந்தருளுகிறார். அன்று அப்பர்சாமி குளத்தில் தெப்பவிழா நடைபெறுகிறது.
வண்டிப்பாளையத்தில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள
ஊத்துக்காட்டு அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தோப்பில் தான்
திருக்கோயிலூராதீன சுவாமிகளின் அதிஷ்டானம் உள்ளது. இதை “சாமியார்
தோட்டம்” என்று அழைக்கிறார்கள்.

     திருவாவடுதுறை ஆதீனம், இலக்கணம் சிதம்பர முனிவர் இத்தலத்திற்கு
“ஸ்ரீ பாடலேஸ்வரர் தலபுராணம்” பாடியுள்ளார். கலம்பக நூலொன்றும்
இத்தலத்திற்குள்ளது. அன்பர்கள் பலர் பாடியுள்ள பாடல்களின் தொகுப்பாக
‘திருப்பாதிரிப்புலியூர்த் தோத்திரக்கொத்து’ நூலும் அச்சிடப்பட்டுள்ளது. 8-2-
1973ல் சந்நிதிவீதியில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் மடலாயம் உள்ளது.