பக்கம் எண் :

214 திருமுறைத்தலங்கள்


     கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகிய இக்கோயிலில்
கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலிருந்து, பராந்தக சோழன், முதலாம்
இராசராசன், முதலாம் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன்,
வீரராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன் ஆகியோரும்
அவர்களைத் தொடர்ந்து பல்லவர்களும் பாண்டியர்களும் திருப்பணிகள்
செய்தும் நன்கொடைகள் தந்தும் இக் கோயிலைப் பராமரித்து வந்துள்ளனர்
என்பது தெரிகிறது.

     “போதினானும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
      போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்
      ஆதிநாலும் அவலம் இல்லாத அடிகள் மறை
      ஓதிநாளும் இடும் பிச்சை ஏற்றுண்டுணப் பாலதே.”
                                          (சம்பந்தர்)

     “கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன்
      உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனதருளால்
      திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன்
      தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே.”      (அப்பர்)

 “பூமேவு பாதிரி விண்படர்ந்தகன்ற மணிக்கோயில் பொலியமேவி
  மாமேவு மால் அயனும் மூவிலை வேல் அம்மானும் வணங்கி ஏத்தத்
  தாம்மேவு தொழில் ஐந்தும் பரைஇயற்ற அனைத்துயிரும்
                                          தழைப்பவைகும்
  காமேவு புகழ்ப் புலிசைப் பாடலேச் சுரன் பதத்தைக் கருதி
                                          வாழ்வோம்.”
                                         (தலபுராணம்)

  “உறையேறு சைவநெறி வளர்ந்தேறச் சமணர் எலாம் உட்கிமாழ்கிப்
  புரையேறக் கண்டவர்கள் ஆனந்தக்களிப்பேறப் புகழ் நா வேந்தை
  கரையேற விட்டபிரான் ஒருபாகம் வளர்கருணைப் பிராட்டியான
  தரையேறு புகழ் புலிசைப் பெரிய நாயகி சரணம் தலைமேற்
                                             கொள்வாம்.”
                                             (தலபுராணம்)

                                             -‘மாணுற்ற
  பூப்பாதிரிக் கொன்றை புன்னை முதற்சூழ்ந்திலங்கும்
  ஏர்ப்பாதிரிப் புலியூர் ஏந்தலே.’             (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. பாடலேஸ்வரர் திருக்கோயில்
     திருப்பாதிரிப் புலியூர் & அஞ்சல்
     கடலூர்.2. - 607 002.