பக்கம் எண் :

218 திருமுறைத்தலங்கள்


52/20. புறவார்பனங் காட்டூர்.

பனையபுரம்.

     நடுநாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் ‘பனையபுரம்’ என்று வழங்குகிறது.

     (1) திண்டிவனம் - விழுப்புரம் மெயின் ரோடில் விக்கிர
வாண்டியைத் தாண்டி,
பண்ருட்டி, நெய்வேலி, தஞ்சாவூர் முதலிய
ஊர்களுக்குச் செல்லும் (தஞ்சாவூர்) சாலையில் திரும்பி 2 கி.மீ. சென்றால்
சாலையோரத்திலுள்ள பனையபுரத்தை அடையலாம். ஊரின்
தொடக்கத்திலேயே கோயிலும் சாலையோரத்தில் உள்ளது.

     (2) விழுப்புரம் : பாண்டி (திருக்கனூர்வழி) செல்லும் பேருந்தில்
சென்றும் கோயிலருகில் இறங்கலாம். முண்டியம்பாக்கத்திற்குப் பக்கத்திலுள்ள
தலம். பனையைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் ஐந்தனுள் இதுவும்
ஒன்று. பிறதலங்களினின்றும் வேறுபாடறிவதற்காக - காடுகளால் சூழ்ந்த
பகுதியாக இத்தலம் விளங்கியமையின் (புறவு : சோலை, காடு) ‘புறவார்
பனங்காட்டூர்’ என்றழைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிய கோயில்.

     இறைவன் - பனங்காட்டீஸ்வரர்.
     இறைவி - சத்யாம்பிகை, புறவம்மை.
     தலமரம் - பனை.
     தீர்த்தம் - பத்ம தீர்த்தம்.

     சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சூரியன் வழிபட்ட தலம். சிறிய
ராஜகோபுரம்- உள்நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம். வெளிப்பிராகாரத்தில்
விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை
மரங்கள் மூன்று உள்ளன. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது.
நின்ற திருக்கோலம். துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். துவார
கணபதியையும், தண்பாணியையும் தொழுது உட்சென்று சத்யாம்பிகையைத்
தரிசிக்கலாம். நவக்கிரகம் தொழுது, வலம் முடித்து, கொடிக்கம்பம் வணங்கி,
வாயில் நுழைந்தால் சுவாமி சந்நிதியை அடையலாம்.

     துவாரபாலகர்கள் உளர். ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் ஆறுமுகப்
பெருமானும் காட்சியளிக்கின்றனர். வாயில்கடந்து