“ஓதிமா மலர்கள் தூவி உடையவள் பங்கா மிக்க சோதியே துளங்கும் எண்தோள் சுடர் மழுப்படையினானே ஆதியே அமரர்கோவேஅணி அணா மலையுளானே நீதியால் நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே." (அப்பர்) விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில் கண்ணால் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய் (திருவாசகம்) “அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை - நெஞ்சகத்தே வைத்தமலை நாயேனைத் தன்அடியார் கூட்டத்தில் வைத்தமலை அண்ணாமலை.” “உண்ணாமுலையாள் ஒருபாக மானமலை கண்ணார் அமுதாய காட்சிமலை - விண்ணோர் துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும் மதிக்குமலை அண்ணாமலை.” “கண்டங்கரியமலை கண்மூன்றுடையமலை அண்டரெலாம் போற்றுதற்கு அரியமலை - தொண்டருக்குத் தோற்றுமலை நாளும் தொழுவோர் எழுபிறப்பை மாற்றுமலை அண்ணாமலை.” (அண்ணாமலைவெண்பா - குருநமசிவாயர்) தருப்பொலியும் அமரா பதிக்கர சானவன் சபையில் நடராச ரங்கைத் தமருகத் தெழுசத்த சூத்திர வியாகரண சாகரம் தான் விரித்தோன் பொருப்புயர் பரங்கிரியின் மறுகினன் மெய்க்கவிசொல் பொய்யா மொழிப் புலவராய் பொன்போ லெனும் கவியுன் முன்பாட உன்பாடல் பூவுலகிலே கொண்டுமேற் கருப்பவம் அகற்றவரும் அருணகிரி நாதராய்க் கந்தரின் அருள் பெற்றபின் |