பக்கம் எண் :

238 திருமுறைத்தலங்கள்


     ‘மடித்தாடும் அடிமைக் கணன்றியே
         மனனே நீ வாழு நாளுந்
     தடித்தாட்டித் தருமனார் தமர் செக்கி
         லிடும் போது தடுத்தாட்
     கடுத்தாடு கரதலத்தில் தமருகமும்
         எரியகலும் கரிய பாம்பும்
     பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம் பலத்தெம்
         பெருமானைப் பெற்றா மன்றே’ (சுந்தரர்)

     “ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
      கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
      நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
      தில்லைச்சிற் றம்பலமே சேர்.”
                                (ஐயடிகள் காடவர்கோன்)

      இருவினையின் மதி மயங்கித்       - திரியாதே
           எழுநரகிலுழலு நெஞ்சுற்      - றலையாதே
      பரமகுரு அருள் நினைந்திட்        - டுணர்வாலே
           பரவு தரிசனையை யென்றெற்  - கருள்வாயே
      தெரி தமிழை யுதவு சங்கப்         - புலவோனே
           சிவனருளு முருக செம் பொற்  - கழலோனே
      கருணை நெறி புரியுமன்பர்க்        - கெளியோனே
           கனக சபை மருவு கந்தப்      - பெருமாளே.
                                           (திருப்புகழ்)

     “சொற் பேறு மெய்ஞ்ஞானச் சுயஞ் ஜோதியாந் தில்லைச்
     சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
     தாயின் உலகனைத்துங் தாங்குத்திருப்புலியூர்க்
     கோயிலமர்ந்த குணக் குன்றமே.”          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. நடராசப்பெருமான் (சபாநாயகர்) தேவஸ்தானம்
     சிதம்பரம் & அஞ்சல் - 608 001.
     சிதம்பரம் வட்டம் - கடலூர் மாவட்டம்.