பக்கம் எண் :

244 திருமுறைத்தலங்கள்


     மூலவருக்குப் பின்னால் இறைவன் இறைவி வடிவங்கள் சுவரில் நின்ற
நிலையில் செதுக்கப்பட்டுள்ளன.

     இத்திருக்கோயிலில் நாடொறும் ஐந்துகால வழிபாடுகள். பெருவிழா
நடைபெறவில்லை. நவராத்திரி, சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி முதலிய
விசேஷ உற்சவங்கள் மட்டும் நடைபெறுகின்றன. இங்குள்ள கல்வெட்டொன்று
கோயிலுக்கு நாளொன்றுக்கு ஒரு நாழி தும்பை மலர்கொண்டு வந்துதர,
தொகையை நிபந்தம் ஏற்படுத்திய செய்தியைத் தெரிவிக்கிறது.

     ‘புனலாடிய புன்சடையாய் அரணம்
     அனலாக விழித்தவனே அழகார்
     கனலாட லினாய்கழிப் பாலையுளாய்
     உனவார்கழல் கைதொழுது உள்குதுமே.’          (சம்பந்தர்)

    ‘வானுலாந் திங்கள் வளர்புன்
        சடையானே என்கின்றாளால்
     ஊனுலாம் வெண்டலை கொண்டூருர்
        பலிதிரிவான் என்கின்றாளால்
     தேனுலாம் கொன்றை திளைக்குந்
        திருமார்பன் என்கின்றாளால்
     கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.”          (அப்பர்)

    ‘எங்கேனும் இருந்து உன்அடியேன் உனைநினைந்தால்
     அங்கேவந்து என்னோடும் உடனாகி நின்றருளி
     இங்கே யென்வினையை அறுத்திட்டு எனையாளுங்
     கங்கா நாயகனே கழிப்பாலை மேயவனே.’      (சுந்தரர்)

                                  -செல்வாய்த்
   தெழிப்பாலை வேலைத் திரையொலி போலார்க்குங்
   கழிப்பாலை இன்பக் களிப்பே.             (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. பால்வண்ணநாத சுவாமி திருக்கோயில்
     திருக்கழிப்பாலை - சிவபுரி - அஞ்சல் - 608 002.
     (வழி) அண்ணாமலை நகர் - சிதம்பரம் வட்டம்
     கடலூர் மாவட்டம்.