பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 245


59/5. திருநல்லூர்ப் பெருமணம்

ஆச்சாள்புரம்

திருஞான சம்பந்தர் தன் வாழ்க்கைத் துணைவியுடன்
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோருடன்
ஜோதியில் கலத்தல்

     சோழ நாட்டு (வடகரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் ஆச்சாள்புரம் என்று வழங்குகிறது. ஞானசம்பந்தர்
திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்ததலம். இக்காரணம் பற்றி இதற்கு
முத்தித்தலம் என்ற பெயருமுள்ளது. நல்லூர் - ஊரின் பெயர். பெருமணம் -
கோயிலின் பெயர். சிதம்பரம் - சீர்காழிச் சாலையில் கொள்ளிடம் புதிய
பாலத்தைத் தாண்டி, கொள்ளிடம் ஊரையடைந்து, மெயின் ரோட்டில்
வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் இடப்புறமாக 8 கி.மீ. சென்றால்
இவ்வூரையடையலாம்.