பக்கம் எண் :

246 திருமுறைத்தலங்கள்


(இதற்கு மேலும் 3 கி.மீ. செல்ல மயேந்திரப்பள்ளி வரும்.) குறுகலான
தார்ப்பாதை.

     சிதம்பரம் - மகேந்திரப்பள்ளி பேருந்துகள் இத்தலம்
     சீர்காழி - மகேந்திரப்பள்ளி வழியாகச் செல்கின்றன.

     சாலையோரத்தில் கோயில் உள்ளது. கோயில் எதிரில் குளம்.

     இறைவன் - சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்.
     இறைவி - வெண்ணீறு உமை நங்கை, சுவேத விபூதி நாயகி,

              விபூதிகல்யாணி.
     தலமரம் - மா.

     தீர்த்தம் - பஞ்சாட்சரதீர்த்தம் முதலான 11 தீர்த்தங்கள்.

     (பஞ்சாட்சர தீர்த்தம் எதிரில் உள்ளது.) பிரமன், முருகன், பிருகு,
வசிஷ்டர், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி முதலியோர்
வழிபட்டதும், காகபுசுண்டரிஷி ஐக்கியமான சிறப்புடையதுமான தலம்.

     சம்பந்தர் பாடல் பெற்றது. தருமையாதீனத் திருக்கோயில்.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உட்சென்றால் கவசமிட்ட கொடி
மரம் நந்தி உள்ளன. விசாலமான உள் இடம். முன்னால் ஞானசம்பந்தரின்
திருமண மண்டபம் உள்ளது. இங்குத்தான் வைகாசி மூலநாளில் சம்பந்தர்
கல்யாண உற்சவம் தேவஸ்தான ஆதரவுடன் உபயதாரர்களால் சாதாரணமாக
நடைபெறுகிறது. உற்சவநாளில் காலையில் உபநயனச் சடங்கும், இரவு
உற்சவத்தில் திருமணமும் வீதியுலாவும், பின்னிரவில் சிவசோதி தரிசன
ஐக்கியமும் நடைபெறுகின்றன. மண்டபத்தில் இடப்பால் அலுவலகம்,
வலப்பால் வாகன மண்டபம் அடுத்து ஞானசம்பந்தர் திருமணஞ்செய்து
கொண்ட ‘தோத்திர பூர்ணாம்பிகை’ அம்மையுடன் உள்ள மூலத்திரு
மேனிகள் உள்ளன. உள்வாயிலில் இருபுறத்திலும் தலப் பதிகக்
கல்வெட்டுக்கள் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர்
சந்நிதிகள் தனிக் கோயில்களாக உள்ளன. தனிவாயில், சுற்று மதிலுடன்
அம்பாள் சந்நிதி உள்ளது. உட்சுற்றில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து
வைக்கப்பட்டுள்ளன. இத்திருமேனிகளுள் திரிபுரசம்ஹாரர், சந்திரசேகரர்,
வாயிலார், சேக்கிழார், பிட்சாடனர், சம்பந்தருடன் உடன் ஐக்கியமான
நீலகண்டயாழ்ப்பாணர் மதங்கசூளாமணி, நீலநக்கர், முருகநாயனார்,
திருமணக்கோலத்தில் ‘தோத்திர பூர்ணாம்பிகை’ யுடன்