பக்கம் எண் :

248 திருமுறைத்தலங்கள்


அஞ்சல் முகவரி:-

     அ/மி. சிவலோகத்தியாகர் திருக்கோயில்
     ஆச்சாள்புரம் & அஞ்சல்
     சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்
     மயிலாடுதுறை RMS - 609 101.

60/6. திருமயேந்திரப் பள்ளி

மகேந்திரப்பள்ளி

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்குகிறது.
பேருந்துகளிலும் மகேந்திரப்பள்ளி என்ற பெயரே இடம் பெற்றுள்ளது.
பண்டைநாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பெயர் கோயிலடிப்
பாளையம் என்பது. ஞானசம்பந்தரின் பாடலில் மயேந்திரப்பள்ளி என்றே
வருகிறது. இத்தலத்திற்கு 2 கி.மீ. தொலைவில் கடல் உள்ளது.

     சிதம்பரம் - சீர்காழிச் சாலையில் கொள்ளிடம் புதிய பாலத்தைத்
தாண்டி, கொள்ளிடம் ஊரை அடைந்து மெயின்ரோடில், வழிகாட்டிப்
பலகையுள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் இடப்புறமாக 8 கி.மீ. செல்ல
ஆச்சாள்புரம் வரும். இதைத்தாண்டி மேலும் 3 கி.மீ. சென்று, நல்லூர் -
முதலைமேடு தாண்டிச் செல்ல, மயேந்திரப்பள்ளியை அடையலாம். குறுகலான
தார்ச்சாலை. கோயில்வரை வாகனம் செல்லும். சாலையில் இடை வளைவுகள்
அதிகம் இருப்பதால் அங்கங்கே நின்று கேட்டுச் செல்லுதல் நல்லது.
ஊர்க்கோடியில் கோயில் உள்ளது.

     தஞ்சையிலிருந்தும்        மகேந்திரப்பள்ளிக்குப்
     கும்பகோணத்திலிருந்தும்   பேருந்து செல்கிறது.

     சிதம்பரம், சீர்காழியிலிருந்து (ஆச்சாள்புரம் வழியாக) நகரப்
பேருந்துகள் செல்கின்றன. இந்திரன், மயேந்திரன், சந்திரன் ஆகியோர்
வழிபட்ட தலம்.

     இறைவன் - திருமேனியழகர், சோமசுந்தரர்.
     இறைவி - வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை.