“-சொல்லுந் தயேந்திர ருள்ளத் தடம் போலிலங்கு மயேந்திரப்பள்ளி இன்பவாழ்வே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. திருமேனியழகர் திருக்கோயில் மகேந்திரப்பள்ளி & அஞ்சல் (வழி) ஆச்சாள்புரம் சீர்காழி வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம் - 609 101. 61/7. தென்திருமுல்லை வாயில் திருமுல்லைவாசல் | சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் வழக்கில் திருமுல்லைவாசல் என்று வழங்குகிறது. (திருமுல்லை வாயில் என்னும் பெயருடைய இருதலங்களுள் ஒன்று இஃது. மற்றது வடதிருமுல்லை வாயில் - சென்னைக்குப் பக்கத்தில் உள்ளது.) சீர்காழியிலிருந்து பேருந்துப் பாதை உள்ளது. 13 கி.மீ. தொலைவு. சீர்காழி - அளக்குடி (வழி) திருமுல்லைவாசல் நகரப்பேருந்துகள் சீர்காழி - திருமுல்லைவாசல் செல்கின்றன. ஊர், கடற்கரையோரத்தில் உள்ளது. கோயிலுக்கு எதிர்க்கோடியில் கடல் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும். சோழ மன்னனின் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம். சோழ மன்னனின் குதிரையின் கால்களை முல்லைக் கொடி சுற்றிக்கொள்ள, அதை மன்னன் வெட்டிய போது ரத்தம் சிதற, தோண்டிப் பார்க்கையில் லிங்கம் வெளிப்பட்டது. மன்னன் தன் தவறுணர்ந்து தன் கழுத்தை அறுக்க முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காடசி தந்ததாகத் தல வரலாறு. இதனால் சிவலிங்கத் திருமேனியில் - பாணத்தில் இரு வெட்டுத் தழும்புகள் உள்ளன. இறைவன் - யூதிகா பரமேஸ்வரர், முல்லைவனேஸ்வரர், முல்லை வனநாதர் இறைவி - சத்யானந்த சௌந்தரி, கோதையம்மை. |