பக்கம் எண் :

252 திருமுறைத்தலங்கள்


62/8. திருக்கலிக்காமூர்

அன்னப்பன் பேட்டை

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     தற்போது அன்னப்பன் பேட்டை என்று வழங்குகிறது.

     (1) திருவெண்காடு சீர்காழிச் சாலையில் ‘மங்கைமடம்’ ஊரை அடைந்து,
அங்கிருந்து திருநகரி போகும் சாலையில் சென்று, ‘கோனையாம் பட்டினம்’
என்று வழிகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் (வலப்புறமாக)
சென்றால் அன்னப்பன் பேட்டையை அடையலாம். ஊர் சாலையோரத்தில்
உள்ளது. ஊர்நடுவே சாலைக்குப் பக்கத்தில் கோயில் உள்ளது.

     (2) சீர்காழி - கோனையாம்பட்டினம் (வழி) அன்னப்பன் பேட்டை
நகரப் பேருந்து செல்கிறது. பராசரமுனிவர் வழிபட்ட தலம்.

      இறைவன் - சுந்தரேஸ்வரர்
      இறைவி - சுந்தராம்பாள், அழகம்மை.
      தீர்த்தம் - சந்திர தீர்த்தம்

     சம்பந்தர் பாடல் பெற்றது. கோயிலுக்கு எதிரில் குளம் உள்ளது.
படிகளின்றிச் சீர்குலைந்து குட்டை போலுள்ளது. முகப்பு வாயிலைக்