சோழநாட்டு (வடகரை)த் தலம். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோயில். சாய் - கோரை. பசுமை + சாய் = பைஞ்சாய். (பைஞ்சாய் என்னும்) கோரை மிகுந்திருந்த தலமாதலின் சாய்க்காடு என்று பெயர் பெற்றதென்பர். காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறுதலங்களுள் இதுவும் ஒன்று. (ஏனையவை திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, ஸ்ரீ வாஞ்சியம்) இயற்பகை நாயனார் தம் மனைவியை இத்தலத்தெல்லை வரை அழைத்து வந்து இறைவனுடன் வழியனுப்பி வைத்தார் என்பது வரலாறு. சீர்காழி - பூம்புகார்ச் சாலையில் இத்தலம் உள்ளது. திருவெண் காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவு. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. சாலையில் சாய்க்காடுடையார் திருக்கோயில் என்று பெயர்ப் பலகையுள்ளது. உபமன்யு முனிவர். இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார் ஆகியோர் வழிபட்டதும் பேறு பெற்றதுமான தலம். இறைவன் - சாயாவனேஸ்வரர், இரத்தினச் சாயாவனேஸ்வரர் இறைவி - கோஷாம்பாள், குயிலினும் நன்மொழியம்மை தலமரம் - பைஞ்சாய் தீர்த்தம் - காவிரி, ஐராவததீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது.) சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. இத்தலம் மிகப் பழமையான சிறப்புடையது - பூம்புகார் எல்லைக்குள் இருப்பது. ‘நெடுங்கதிர்க்கழனித்தண் சாயக்கானம் (அகநானூறு 220) ‘செந்நெலஞ்செறுவின் அன்னந்துஞ்சம் பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டன்ன’ (அகநானூறு 73) இத்திருக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாபதி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயில், ஓடுகள் வேயப்பட்டு முன்னால் இருபூதங்கள் இருக்க, கோயில் குளத்திற்குத் தெற்கில் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடிமரமில்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிராகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்கை நாயனார் துணைவியாருடன் உள்ள சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள நால்வர் சந்நிதியில் மூவர் முதலிகளே’ உளர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் |