பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 257


      ‘தோடுலா மலர்கள்தூவித் தொமுதெழு மார்க்கண்டேயன்
       வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்தகாலன்
       பாடுதான் செல்லு மஞ்சிப் பாதமே சரணமென்னச்
       சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே (அப்பர்)

      ‘அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அற்புதமாய்க்
       குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
       போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
       சாய்க்காடு கைதொழு நீ சார்ந்து.’
                                   
(ஐயடிகள் காடவர்கோன்)

       சீர்பூத்த வெண்ணிலவைத் திரைபூத்த
             வரநதியைச் செந்தே னூற்று
       மார்பூத்த மலரதனைக் கடுக்கைதனைச்
             செஞ்சடிலத் தணியுங் கோவைக்
       கார்பூத்த மேனியனும் மறைபூத்த
             நாவினனும் காணா தோங்கும்
       ஏர்பூத்த சின்மயச்சா யாவனத்தெம்
             மிறையவனை இறைஞ்சல் செய்வாம்.
                      
-சாயாவனப் புராணம் - தலபுராணம்

                                      வில்லேந்திய வேலவர் துதி

     ‘வினைசேரா சேர்ந்தனவும் மெல்ல விலகும்
      நினைவுகள் தூயதாம் நெஞ்சில் - இனையன
      எல்லாம் அருள்வான் எழில்மிகு சாய்க்காட்டு
      வில்லேந்தி என்றே விளம்பு.’

                                                                  
                                                                               -‘வலிக்காலில்
     பாய்க்காடு கின்ற வொரு பச்சைமுகில் பரவுஞ்
     சாய்க்காடு மேவுந் தடங்கடலே.’              (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    அ/மி. சாயாவனேஸ்வரர் திருக்கோயில்
     சாயாவனம் - காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல் - 609 105
     சீர்காழி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.
     மயிலாடுதுறை R.M.S.


தலம் -17