பக்கம் எண் :

260 திருமுறைத்தலங்கள்


65/11. திருவெண்காடு

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     சுவேதாரண்யம், சுவேதவனம் என்றும் பெயருடைய தலம்.

     மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதியுள்ளது. மயிலாடுதுறை -
மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்து திருவெண்காடு வழியாகச் செல்கிறது.
இந்திரன் வெள்ளையானை வழிபட்ட தலம். அச்சுதகளப்பாளர் மூலமாக
மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்குளநீர்
உள்ள பதி.

     பெரிய கோயில். சுற்று மதில்களுடன் நன்குள்ளது. நன்கு பராமரிக்கப்
பட்டு வருகின்றது. மூன்று மூர்த்திகள், மூன்று தலமரங்கள், மூன்று
அம்பிகைகள், மூன்று தீர்த்தங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ள தலம்.
(சுவேதாரண்யர், அகோரர், நடராசர் - வட ஆலமரம், கொன்றை, வில்வம் -
பிரம்மவித்யாநாயகி - துர்க்கை காளி - சூரிய சந்திர, அக்கினி தீர்த்தங்கள்.)