பக்கம் எண் :

272 திருமுறைத்தலங்கள்


தலையிலுள்ள பூவையெடுத்து வைத்துக் கொண்டு, சென்று தரிசித்து விட்டுப்
பின்பு தலையில் சூடிக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை
பின்பற்றப்படுகிறது.

     வாரத்தில் ஒருநாள் - வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குமேல்
அர்த்தசாமம் முடிந்தவுடன் இதற்குப் புனுகுஎண்ணெய் சார்த்தி, நெய்யில்
செய்த வடை, பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. நித்தியப்படி நெய்தீபமே
ஏற்றப்படுகிறது.

     இப்பெருமானுக்குச் சட்டையப்பர், சட்டைநாதர், வடுகநாதர் எனப்பல
பெயர்களுண்டு. சட்டைநாதரைத் தரிசித்துக் கீழிறங்கி வலமாக வரும்போது
மூங்கில்கன்றும் அதன்பக்கத்தில் பாரிசாதமும் உள்ளதைக் காணலாம்.
அடுத்துத் தேவேந்திரலிங்கம், நவக்கிரகம், பிரமபுரீஸ்வரலிங்கம் உள்ளன.
பிரமதீர்த்தக் குளம் முதன்மை வாய்ந்த தீர்த்தமாகும். முன்னால் வளைவு
போடப்பட்டு, அதன் இருபுறங்களிலும், பிரமன் வழிபடுவது, தந்தையாகிய
சிவபாத இருதயருக்கு ஞானசம்பந்தர் தோணியப்பரைச் சுட்டிக் காட்டுவது,
அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிப்பது
முதலியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளன. பிராகாரத்தில்
திருஞானசம்பந்தர் மூலச்சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி - நின்ற
திருக்கோலம் - மனநிறைவான தரிசனம். இச்சந்நிதி உள்மண்டபத்தில்
சலவைக் கற்களில் திருஞானசம்பந்தர் பதிகமும், மகாவித்துவான் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியுள்ள சீகாழிக் கோவைப் பாடல்களும்
பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.

     சீகாழி அருணாசலக் கவிராயர் தலபுராணம் பாடியுள்ளார். ‘திருக்கழுமல
மும்மணிக்கோவை’ பட்டினத்தடிகளால் பாடப்பட்டது. ஞானசம்பந்தர் மீது
மும்மணிக் கோவை, திருச்சண்பை விருத்தம், திருத்தொகை திருவந்தாதி,
திருவுலாமாலை, திருக்கலம்பகம் முதலிய பிரபந்தங்களை நம்பியாண்டார்
நம்பிகள் பாடியுள்ளார்.

     காழிக்குமரவேளைச் சிறப்பித்துப் பாடியுள்ள திருப்புகழும் உள்ளது.
இத்தலத்தில் வாழ்ந்த மகான்களில் 1. உலகத் தீமைகளைப் பார்க்க விரும்பாது
மச்சைவிட்டு இறங்காமல் மேலேயே தங்கி வாழ்ந்து, மறைஞான சம்பந்தரிடம்
அருளுபதேசம் பெற்ற மச்சுச்செட்டியார் 2. ‘சிவப்பிரகாசம்’ நூலுக்குக்
கொளுச் சூத்திரம் எழுதியவரும் காழிப் பழுதை கட்டிச் சிற்றம்பலநாடிப்
பண்டாரம் என்னும் பெயர் உடையவருமான சீகாழிச் சிற்றம்பல நாடிகள்
3.‘ஒழிவில் ஒடுக்கம்’ நூலைப்பாடிய சீகாழிகண்ணுடைய வள்ளலார்
4. ‘காழிப்புராணம்’,