பக்கம் எண் :

274 திருமுறைத்தலங்கள்


  ‘மற்றொருதுணையினி மறுமைக்குங் காணேன்/வருந்தலுற்றேன்
                                     மறவாவரம் பெற்றேன்
  சுற்றிய சுற்றமும் துணையென்று கருதேன் / துணையென்று நான்
                                     தொழப்பட்ட ஒண்சுடரை
  முத்தியு ஞானமும் வானவரறியா / முறைமுறை பலபல
                                     நெறிகளுங்காட்டிக்
  கற்பனைகற்பித்தகடவுளை யடியேன் / கழுமல வளநகர்க்கண்டு
                                     கொண்டேனே.’
                                                 (சுந்தரர்)

     ‘பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
     துறவி யெனுந்தோல் தோணி கண்டீர் - நிறையுலகில்
     பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
     தன்மாலை ஞானத் தமிழ்.’
                    (நம்பியாண்டார் நம்பி - மும்மணிக்கோவை)


                        
தலபுராணம்
                     பிரமபுரீசுவரர்

    நீர்பூத்த பேரொளியாய் உயிர்க்குயிராய் அகண்டிதமாய்
                    நிறைவாய் நீங்காப்
    பேர்பூத்த குணம்குறிகள் இகந்தபழ மறைக்கொழுந்தாய்ப்
                   பெருமை சான்ற
    பார்பூத்த பரையினொடு கலந்துகுரு ஆதிமும்மைப்
                   படிவ மாகிச்
    சீர்பூத்த காழிநகர் அமர்ந்தபிர மேசனையாம்
                   சிந்தை செய்வாம்.

                       திருநிலைநாயகி

  ஒருநிலையே உலகனைத்தும் பொருள்நிலைசேர் வெண்டிருநீ(று)
                                        உயர்ந்து வேதம்
  கருநிலையால் வளர்ந்தோங்க இரங்குமரு மறைக்குழலி
                                        தன்பால் அன்பால்
  பெருநிலைசேர் முலைக்கண்ணும் சிலைக்கண்ணும் இரங்கியஎம்
                                        பிராட்டி அன்பர்
  கருநிலைதீர்த் தருள்காழித் திருநிலைநா யகிதுணைத்தாள்
                                        கருத்துள் வைப்பாம்.