சட்டை நாதர் துங்க மாமணித் தூணில்வந் திரணியன் தோள்வலி தனைவாங்கும் சிங்க வேற்றுரி அரைக்கசைத் துலகெலாம் தேர்ந்தளந் தவன்மேனி அங்கம் யாவும்ஓர் கதையதாய்க் கொண்டதன் அங்கியாப் புனைகாழிச் சங்க வார்குழைச் சட்டைநா யகன்துணைத் தாமரைச் சரண்போற்றி திருவாவடுதுறை ஆதீனம் எட்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் இயற்றியருளிய திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் கோலொன்று கொண்டகில வலயம் புரக்கவரு கோமாறன் மேவிய தமிழ்க் கூடலிற் சமண்மூகர் திருமடத் திட்டஎரி கொற்றவர் பற்ற மொழியா மாலொன்று மங்கையர்க் கரசியார் படுதுயரின் வலிகண்டு சென்று தவிர வஞ்சப் பெருங்கூனும் வெப்பந் தவிர்த்தருளு மதுரவா சகமதகு பாய் காலொன்று மாநதி பரந்துவரு கழனியிற் கலையெனக் குவளை களைவார் கண்டுவெரு வித்தங்கள் கைநெரித் தருகுமிடை கன்னலங் காடு மறையச் சேலொன்று விளையாடு சீகாழி நாடாளி செங்கீரை யாடி யருளே செழுநான் மறைத் தலைவ திருஞான சம்பந்த செங்கீரை யாடி யருளே. சிந்துற் றெழுமாமதி அங்கித் - திரளாலே தென்றற்றரு வாசமிகுந்துற் - றெழலாலே அந்திப் பொழுதாகிய கங்குற் - றிரளாலே அன்புற்றெழு பேதை மயங்கித் - தனியானாள் நந்துற்றிடு வாரியை மங்கத் - திகழாயே நஞ்சத் தொளிர் வேலினையுந்திப் - பொருவேளே சந்தக்கவி நூலினர் தஞ்சொற் - கினியோனே சண்பைப்பதி மேவிய கந்தப் - பெருமாளே. (திருப்புகழ்) |