பக்கம் எண் :

282 திருமுறைத்தலங்கள்


செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மற்றைய
நாள்களில் செல்வமுத்துக் குமாரசுவாமியின் ஆன்மார்த்த பூஜா மூர்த்தியான
ஸ்ரீ முத்து லிங்கத்திற்குத்தான் அபிஷேகம் நடைபெறும்.

    இதுதவிர, இக்கோயிலில் உள்ள மற்றொரு சிறப்பு :-


    அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த
பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். இதற்குப் புழுகாப்பு என்று பெயர்.
இப்புழுகாப்பு தரிசனம் இங்குச் சிறப்புடையது.

   
“கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
     பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
     வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
     போதத்தால் வழிபட்டான் ‘புள்ளிருக்குவேளூரே.”   (சம்பந்தர்)

    “பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாட்
          பாமாலை பாடப் பயில்வித்தானை
     எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
          எம்மானை என்உள்ளத்துள்ளே யூறும்
     அத்தேனை அமுதத்தை ஆவின்பாலை
          அண்ணிக்கும் தீங்கரும்பை அரனையாதிப்
     புத்தேளைப் புள்ளிருக்கும் வேளூரானைப்
          போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.”   (அப்பர்)

உரத்துறை போதத்       
    உனைச்சிறி தோதத்   
மரத்துறை போலுற்       
    மலத்திருள் மூடிக்     
பரத்துறை சீலத்          
    பணித்தடி வாழ்வுற்    
வரத்துறை நீதர்க்         
    வயித்திய நாதப்       
தனியான-
தெரியாது ;
றடியேனும் -
கெடலாமோ ;
தவர்வாழ்வே-
றருள்வோனே ;
கொருசேயே-
பெருமாளே.   (திருப்புகழ்)

    வாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென
        மணிமுறுவ னிலவுகாலும்
    மழலைவாய் முத்துண்டு முச்சிமோந் துந்திரு
        மடித்தலத் தினிலிருத்திப்
    பாராட்டி யுந்தமது கண்மணிப் பாவைநின்
        படிவமா கக்காட்டியிப்