பாலரொடும் விளையா டெனப்பணித் துந்தங்கள் பார்வைகளி யாடச்செயும் தாராட்டு மதிமுடித் தீராத வினைதீர்த்த தம்பிரா னுந்தம்பிரான் தழலுருவி லொருபாதி குளிரவொரு புறநின்ற தையனா யகியும்வைத்துச் சீராட்டி விளையாடு சேனா பதிக்கடவுள் சிறுதே ருருட்டியருளே திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே. (முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்) அன்னைசொற் கொருசெவி யையர்சொற் கொருசெவி யம்மான் றுதிக்கொருசெவி யானைசொற் கொருசெவி வீரர்சொற் கொருசெவி அயன்றுதிக் கொருசெவிவிணோர் மன்னர்சொற் கொருசெவி வள்ளிசொற் கொருசெவி வான்வனிதை சொற்கொருசெவி மறைதுதிக் கொருசெவி யடியர்சொற் கொருசெவி வல்லசுரர் சொற்கொருசெவி பன்னிரண் டுங்கொடுத் தென்சொல்கே ளாமற் பாராமுகம தாயிருந்தால் பாவியேன் மெலிவுகுறை யெவர்செவியி லேற்றிப் படுந்துயர் களைந்துகொள்வேன் முன்னமறை நாலும்வந் துன்னுபுள் ளூரனே முக்கட் குருக்கள் குருவே முத்தர்குரு வேயோக சித்தர்குரு வேபால முத்துக்கு மாரகுருவே. (செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பா) செவிகளொரு பன்னிரண் டுங்கேட்க அயனையுந் தேவர்பணி யுங்குருவையும் தேவர்கோ னென்றசத மகனையும் செந்தமிழ்சொல் தென்பொதிய மலைமுனியையும் புவியினக் கீரரையும் ஒளவையையும் நீமுன் புகழ்ந்தபொய் யாமொழியையும் புகழ்கொண்ட அருணகிரி நாதரையும் வெகுசித்தர் போற்றுகரு வூராரையும் குவியுமன மறாச்சிறு புலவரையும் வருபுலவர் கொண்டாடு நல்லபகழிக் |