பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 291


     மூலவர் சுயம்பு. உயர்ந்த பாணம். பட்டுசார்த்தி கம்பீரமாகக் காட்சி
தருகிறது. இலிங்கத்தின் உச்சியில் ‘குழி’ உள்ளது. அம்பாள் சந்நிதி
அழகாகவுள்ளது. நாடொறும் இருகால வழிபாடுகளே நடைபெறுகின்றன. ஆடி
வெள்ளிக்கிழமைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பெருவிழா
நடைபெறவில்லை.

     “அச்சம்இலர் பாவம்இலர் கேடும்இலர் அடியார்
      நிச்சம்முறு நோயும்இலர் தாமுந்நின்றியூரில்
      நச்சம் மிடறுடையார் நறுங்கொன்றை நயந்தாளும்
      பச்சம் உடையடிகள் திருப்பாதம் பணிவாரே.”   (சம்பந்தர்)

     “பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
      மறையின் ஓசையும் மங்கி அயலெலாம்
      நிறையும் பூம்பொழில்சூழ் திருநின்றியூர்
      உறையும் ஈசனை உள்கும்என் உள்ளமே.”         (அப்பர்)

     “திருவும் வண்மையும் திண்டிறலரசுஞ்
           சிலந்தியார் செய்த செய்பணிகண்டு
      மருவுகோச் செங்கணான் றனக்களித்த
           வார்த்தை கேட்டுநுன் மலரடியடைந்தேன்
      பெருகு பொன்னிவந்துந்து பன்மணியைப்
           பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
      தெருவுந் தெற்றியுமுற்றமும் பற்றித்
           திரட்டுந் தென்திரு நின்றியூரானே.”       (சுந்தரர்)

                                         -கொடைமுடியா
      நன்றியூரென்றறிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற
      நின்றியூர் மேவு நிலைமையனே.          (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. மகாலட்சுமீசர் திருக்கோயில்
     திருநின்றியூர் & அஞ்சல்
     மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் - 609 118.