பக்கம் எண் :

294 திருமுறைத்தலங்கள்


சிவலோக நாதரைத்தரிசிக்க முயன்ற நாயனார், தன் குலநிலையை எண்ணி
வெளியிலிருந்து பார்க்க, நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார். இறைவன்
இவருடைய உள்ளப் பக்தியைக் கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று
விலகியிருக்குமாறு பணித்தார். இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக்
காணலாம். இதைக் கோபால கிருஷ்ண பாரதியார் தம் கீர்த்தனையில்
பின்வருமாறு சுவைபடப் பாடியுள்ளார் :-

    ‘சிவலோகநாதன் திருச்சந்நிதானம்
    மலையாகிய நந்தி மறைத் திடுதிங்கே
    பலகாலஞ் செய்த பாழ்வினை குவிந்து
    மலையாகி இப்படி மறைத்ததோ என்றார்.’

    “வழிமறைத் திருக்குதே - மலைபோல்
     ஒருமாடு படுத்திருக்குதே’
     பாவிப் பறையனிந்த ஊரில் வந்து மிவன்
     பாவந்தீரேனோ - உன்தன் - பாதத்தில் சேரேனோ
                                      சிவலோக நாதா-

     ‘தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும்
     கோவிலுள் வரமாட்டேனே ஐயே
     ஓரடிவிலகினால் போதுமிங்கே நின்று
     உற்றுப் பார்க்கச்சற்றே விலகாதோமாடு-’

     நந்தியை விலகச்சொன்ன கீர்த்தனை வருமாறு :-

   ‘சற்றே விலகியிரும் பிள்ளாய் - சந்நிதானம் மறைக்குதாம் - நீ
   நற்றவம் புரியும் நம்மிடம்திரு நாளைப்போவார் வந்திருக்கின்றார் -
   சாதிமுறைமை பேசுறான் - தன்னை இகழ்ந்து பேசுறான்
   கோதிலாக் குணமுடையோன் கோபங்கொண்டால் தாளமாட்டாய்
   வேதகுலத்தைப் போற்றுறான் விரும்பி விரும்பி போற்றுறான்
   பூதலத்தில் இவனைப்போல புண்யபுருஷன் ஒருவனில்லை
   பக்தியில் கரைகண்டவன் பார்த்துப்பார்த்து உண்டவன்
   சித்தம் குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் - தயவுசெய்து.

     நந்தி விலகத்தரிசித்த நாளைப்போவார் கோயிலின் மேற்புறமுள்ள
ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணையாரு
மில்லாததால் இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு
கணபதியை அனுப்பினார். அவர் துணையால்