பக்கம் எண் :

296 திருமுறைத்தலங்கள்


சோமவாரத்திலும் இரவு அர்த்தசாமப் பூசையின்போது புனுகுசட்டம்
சார்த்தப்படுகிறது.

     மூவர் திருப்பதிகங்கள் பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டுள்ளன.
குளத்துப்படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. திருநாளைப்போவார்
நூல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேரடியில் நின்று தரிசித்த
நந்தனாருக்கு, அத் தோடியைப் புதுப்பித்துக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

     நாடொறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கல்வெட்டில்
இத்தலத்திறைவன் ‘சிவலோகமுடைய நாயனார்’ என்று குறிக்கப்படுகின்றார்.
இத்தலத்துக் கல்வெட்டுக்களில் இறைவனுடைய திருமஞ்சனத்திற்கும்,
திருப்பள்ளியெழுச்சிக்கும், பூமாலைகள் கட்டிச்சார்த்துதற்கும் நிலம்
விடப்பட்ட செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இத்தலத்திற்குப் பக்கத்தில்
ஏயர்கோனின் அவதாரத் தலமாகிய ‘பெருமங்கலம்’ உள்ளது. 1974ல்
கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோயிலில் திருப்பணிகள் தொடங்க
ஏற்பாடுகள் செய்யவுள்ளன.

     ‘முந்தி நின்ற வினைகள் அவைபோகச்
     சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
     அந்தமில்லா அடிகளவர் போலும்
     கந்தமல்கு கமழ்புன் சடையாரே.’           (சம்பந்தர்)

     இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை
         இனிய நினையாதார்க்கு இன்னாதானை
     வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
         மாட்டாதார்க்கு எத்திறத்து மாட்டாதானைச்
     செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைத்
         திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
     நெல்லால் விளைகழனி நீடூரானை
         நீதனேன் என்னே நான் நினையாவாறே.”     (அப்பர்)
 
     “வையகமுற்று மாமழை துறந்து
         வயலில் நீரிலை மாநிலந்தருகோம்
     உய்யக் கொள்க மற்றெங்களை யென்ன
         ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும்