பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 297


    பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்தும்
          பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளுஞ்
     செய்கை கண்டு நின்திருவடி யடைந்தேன்
          செழும் பொழில் திருப்புன்கூர் உளானே."      (சுந்தரர்)

 “விரும்புன்கூர் அடியென்னுந் தொழும்பர் தமக்கருள் தழைத்து
                                            வினைக்கீடாக
  கரும்புன்கூர் பவப்பிணிகள் அணுகாமலுத்தமாங் கத்தின்மீது
  மருப்புன்கூர் வரைகோலால் புண்ணியத்தை வரைந் திருமை
                                            வாழ்வளிப்பத்
  திருப்புன்கூரிடை மேவுஞ் சிவலோக நாயகன்தாள் சென்னி
                                            சேர்ப்போம்”
                                            (தலபுராணம்)
                                         
                                        - ஒன்றிக்
    கருப்புன்கூர் உள்ளக் கயவர் நயவாத்
    திருப்புன்கூர் மேவுஞ் சிவனே.              (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

    
அ/மி. சிவலோகநாதர் திருக்கோயில்
     திருப்புன்கூர் & அஞ்சல் - சீர்காழி வட்டம்
     நாகப்பட்டினம் மாவட்டம் - 609 112.

75/21. திருநீடூர்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     1) மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை - நீடூர்
பேருந்து வசதி உள்ளது.

     2) வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து வருவோர் திருப்பனந்தாள்
சாலையில் ‘பட்டவர்த்தி’ வந்து இடப்புறமாகத் திரும்பி மயிலாடுதுறை
சாலையில் சென்று நீடூரையடையலாம். சாலைக்குச் சற்று உள்ளடங்கிக்
கோயில் உள்ளது. ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது நீடித்திருக்குமாதலின்
இஃது ‘நீடூர்’ என்று பெயர் பெற்றதென்பர். தலமரம் மகிழம் ஆதலின்
மகிழவனம். வகுளாரண்யம் எனவும் பெயர்களுண்டு.