பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 299


     3-வது இராசாதிராசன் காலத்திய கல்வெட்டில் இவ்வூர் ராஜசிகாமணி
சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும்
கந்தமாதவன் என்பவனால் விமானம் கட்டப்பட்டதாகவும், ஊர்ச்சபை கூடிச்
சட்டங்களைத் தொகுத்ததாகவும் செய்திகள் தெரியவருகின்றன.

திருப்புன் கூரும் திருநீடூரும் :

   ‘கலைஞானம் கல்லாமே கற்பித்தானைக்
        கடுநரகஞ்சாராமே காப்பான் தன்னைப்
     பலவாய வேடங்கள் தானேயாகிப்
        பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானைச்
     சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
        திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
     நிலையார் மணிமாட நீடூரானை
        நீதனேன் என்னே நான்நினையாவாறே.’
                                          (அப்பர்)

     ‘அல்லல் உள்ளன தீர்த்திடுவானை
          அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானைக்
      கொல்லை வல்அரவம் அசைத்தானைக்
          கோலமார் கரியின் னுரியானை
      நல்லவர்க்கு அணியானவன் தன்னை
          நானும் காதல் செய்கின்றபிரானை
      எல்லி மல்லிகையே கமழ்நீடூர்
          ஏத்தி நாம் பணியாவிடலாமே.’ (சுந்தரர்)

                                       - உருப்பொலிந்தே
     ஈடுரிலாதுயர்ந்த வேதுவினா லோங்குதிரு
     நீடூரிலங்கு நிழல் தருவே.           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. அருட்சோமநாதர் திருக்கோயில்
     நீடூர் & அஞ்சல் - 609 203.
     மயிலாடுதுறை வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்