76/22. திருஅன்னியூர் பொன்னூர் | சோழநாட்டு (வடகரை)த் தலம். தற்போது பொன்னூர் என்று வழங்குகிறது. மயிலாடுதுறையிலிருந்தும், நீடூரிலிருந்தும் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. மயிலாடுதுறையிலிருந்து 8 கி.மீ. வருணன், அக்கினி வழிபட்ட தலம். சூரியன், ரதி, பாண்டவர் முதலியோரும் வழிபட்டுள்ளனர். இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கர ஷேத்திரம், பானு ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள். இத்தலத்திற்குச் சுற்றிலும் நீடூர், மயிலாடுதுறை, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி குறுக்கை முதலிய தலங்கள் உள்ளன. இறைவன் - ஆபத்சகாயேசுவரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர். இறைவி - பிருகந்நாயகி; பெரியநாயகி தலமரம் - எலுமிச்சை தீர்த்தம் - வருணதீர்த்தம், அக்னி தீர்த்தம் (இரண்டும் ஒன்றே) |